சத்யம் ப்ரீ புக்கிங்கில் சாதனை படைத்த ‘கபாலி’

மற்றுமொரு சாதனை படைத்த ‘கபாலி’

செய்திகள் 15-Jul-2016 4:04 PM IST VRC கருத்துக்கள்

சினிமாவை பொறுத்தவரையில் தற்போதைய ‘ஹாட் டாபிக்’ சூப்பர் ஸ்டார்ர ஜினியின் ‘கபாலி’ திரைப்படம் தான்! தமிழ் சினிமா இதுவரை கண்டிராத ஒரு எதிர்பார்ப்பும், பரபரப்பும் சூப்பர் ஸ்டார்ர ஜினியின் ‘கபாலி’ மீது எற்பட்டுள்ளது. வருகிற 22-ஆம் தேதி உலகம் முழுக்க மிகப் பிரம்மாண்டமான முறையில் அதிக எண்ணிக்கையிலான தியேட்டர்களில் வெளியாகவிருக்கிறது ‘கபாலி’. இந்நிலையில் சென்னையில் அதிக திரையரங்கங்களை கொண்ட குழுமமாக இருந்து வரும் சத்யம் சினிமாஸில் ‘கபாலி’யின் ப்ரீ புக்கிங் ஆரம்பித்த 10 நிமிடங்களிலேயே ஒரு வாரத்திற்கான டிக்கெட்ஸ் அனைத்தும் முன் பதிவு செய்யப்பட்டு விட்டது! ‘கபாலி’யை பொறுத்தவரை இதுவும் ஒரு சாதனை தான்! காரணம் இதுபோன்று பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகும் படங்களுக்கு ’ப்ரீ புக்கிங்’ என்ற முறையில் 3 நாட்களுக்கு மட்டும் தான் டிக்கெட்டுகள் முன் பதிவு செய்யப்படும்! ஆனால் ரஜினியின் ‘கபாலி’யை பொறுத்தவரையில் அது 7 நாட்களாக அதிகரிப்பட்டிருப்பதும் ஒரு சாதனையாகும்! போக போக ‘கபாலி’ என்னென்ன சாதனைகள் படைக்கப் போகிறது என்பதை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;