ஹைபர் லிங்க் திரைக்கதை யுக்தியில் ‘மாநகரம்’

‘மாநகரம்’ படத்தில் ஹைபர் லிங்க் திரைக்கதை யுகிதி!

செய்திகள் 15-Jul-2016 2:35 PM IST VRC கருத்துக்கள்

நயன்தாரா நடிப்பில் ‘மாயா’ எனும் வெற்றிப் படத்தை தயாரித்து வழங்கிய ‘பொட்டென்ஷியல் ஸ்டுடியோஸ்’ நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக உருவாகியுள்ள படம் ‘மாநகரம்’. அறிமுக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். வெவ்வேறு ஊர்களில் இருந்து சென்னைக்கு வரும் நான்கு பேர் சென்னை போன்ற பெரும் நகரத்தை எவ்வாறு பார்க்கிறார்கள், அந்நகரம் அவர்களை எவ்வாறு நடத்துகிறது என்பதே ‘மாநகர’த்தின் கதை கரு! த்ரில்லர் பாணியில் சொல்லப்படும் இந்த கதையில் அந்த நான்கு பேர் கேரக்டர்களுக்குள் ஒரு உள் தொடர்பு இருந்துகொண்டே இருக்கும் விதமாக ‘ஹைபர் லிங்க்’ எனும் திரைக்கதை யுக்தியை கையாண்டுள்ளார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்! கதையின் நாயகர்களாக ஸ்ரீ, சந்தீப் கிஷன், சார்லி மற்றும் முனிஸ்காந்த், ராமதாஸ் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கதாநாயகியாக ரெஜினா காசென்ட்ரா நடித்துள்ளார். அறிமுக ஒளிப்பதிவாளர் செல்வகுமார் ஒளிப்பதிவு செய்ய, அறிமுக இசை அமைப்பாளர் ஜாவித் இசை அமைத்துள்ளார். படத்தொகுப்பை ஃபிலோமின் செய்கிறார். அன்பறிவு சண்டை பயிற்சி அளித்துள்ளார். இப்படத்தின் 70 சதவிகித படப்பிடிப்பு சென்னையின் பரபரப்பான சில பகுதிகளில் நடைபெற்றுள்ளது. இறுதிகட்ட பணிகளில் இருந்து வரும் ‘மாநகரம்’ விரைவில் ரிலிசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;