கயல், கிரகணம், ரூபாய் ஆகிய படங்களை தொடர்ந்து சந்திரன் கதாநாயகனாக நடிக்கும் படம் ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. ‘நாளைய இயக்குனர்’ புகழ் சுதர்சன் இயக்கும் இப்படத்தின் புஜை இன்று காலை ஏவி.எம்.ஸ்டுயோவில் உள்ள விநாயகர் கோயிலில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ‘பிச்சைக்காரன்’ பட புகழ் சாதனா டைட்டஸ் மற்றும் பார்த்திபன், சாம்ஸ், ‘இதற்கு தானே ஆசைப்பட்டாய்’ டானி ஆகியோருடன் நாசர் உட்பட பல திரையுலக பிரமுகர்கள் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். ‘2 MOVIE BUFF’ என்ற நிறுவனமும் 'ACROSS BEYOND LIMITS' என்ற நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ‘நளனும் நந்தினியும்’ பட புகழ் அஷ்வத் நாகநாதன் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்தின் சிஷ்யர் மகேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கலை இயக்கத்தை ரம்யன் கவனிக்கிறார். முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் படபிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலேயே நடைபெறவிருக்கிறது.
ஆதிக் ரவிச்சந்திரனும், பிரபு தேவாவும் ஒரு படத்தில் இணைகிறார்கள் என்றும் இந்த படத்தின் அதிகாரபூர்வ...
சென்ற வாரம் சூர்யாவின் ‘காப்பான்’, பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு சைஸ்-7’, மற்றும் ‘சூப்பர் டூப்பர்’...
‘கயல்’ சந்திரன், சாதனா டைடஸ் இணைந்து நடித்துள்ள ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம்’. இந்த படத்தின்...