நகுலின் ‘செய்’ பட இசை எப்போது?

பொம்மலாட்ட பின்னணியில் உருவாகும் படம்!

செய்திகள் 15-Jul-2016 11:29 AM IST VRC கருத்துக்கள்

நகுல், பாலிவுட் நடிகை ஏஞ்சல், பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ‘செய்’. தமிழர்களின் மிகப் பழமையான மரபுவழி கலைகளில் ஒன்றான பொம்மலாட்டத்தின் பின்னணியில் இப்படத்தின் நாயகன் நகுலும், நாயகி ஏஞ்சலும் இடம் பெற்றுள்ள படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியானது! ராஜேஷ் கே.ராமன் கதை திரைக்கதை, வசனம், எழுதியுள்ள இப்படத்தை ராஜ்பாபு இயக்கி வருகிறார். ‘தூஙா நகரம்’, ‘சிகரம் தொடு’ படங்களின் ஒளிப்பதிவாளர் விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அறிமுக இசை அமைப்பாளர் நிக்ஸ் லோபஸ் இசை அமைக்கிறார். ‘ட்ரிப்பி டர்டில் புரொடக்‌ஷன்’ நிறுவனம் சார்பில் மன்னு தயாரித்து வரும் இப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற்று முடிந்துள்ளது. இப்படத்தின் பாடல்களை அடுத்த (ஆகஸ்ட்) மாதமும், படத்தை அக்டோபர் மாதமும் வெளியிட திட்டமிட்டுள்ளனர். துபாய் மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் ‘ட்ரிப்பி டர்டில் புரொட்க்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் முதல் தமிழ் படம் ‘செய்’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

60 வயது மாநிறம் ட்ரைலர்


;