இந்திய டிரென்டிங்கில் சிம்புவின் ‘இது நம்ம ஆளு’

சிம்பு, நயன்தாரா நடித்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் வெளியாகி 50வது நாளை எட்டியுள்ளது

செய்திகள் 15-Jul-2016 11:13 AM IST Chandru கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் நீண்டநாள் தயாரிப்பாக இருந்த ‘இது நம்ம ஆளு’ திரைப்படம் மே 27ஆம் தேதி உலகமெங்கும் வெளியானது. ‘வல்லவன்’ படத்திற்குப் பிறகு இப்படத்திற்காக மீண்டும் ஜோடி சேர்ந்தனர் சிம்புவும், நயன்தாராவும். அதோடு சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தயாரித்த இப்படத்திற்கு தம்பி குறளரசன் இசையமைத்தார். பலத்த எதிர்பார்ப்புகள் இப்படத்தீன்மீது இருந்தபோதும், கடைசி நேரத்தில் ரிலீஸ் தேதிகள் மாறிக் கொண்டேயிருந்தன. இதனால், சிம்பு ரசிகர்களே சற்று உற்சாகத்தை இழந்த சோகமும் நடந்தது. ஆனால், அத்தனை பிரச்சனைகளையும் சமாளித்து ஒருவழியாக படத்தை மே 27ஆம் தேதி ரிலீஸ் செய்தார்கள்.

வழக்கமான சிம்பு படம்போல் அதிரடி ஆக்ஷன், பஞ்ச் வசனம் இல்லாமல் முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்போது அப்படம் 50வது நாளை எட்டியிருப்பதால் உற்சாகமான சிம்பு ரசிகர்கள், பட வெற்றி குறித்த ஹேஷ்டேக் ஒன்றை உருவாக்கி அதனை இந்திய அளவில் டிரென்ட் செய்து வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;