5 நாள் வசூலைக் குவிக்க ‘பிளான்’ போட்ட ‘ரெமோ’

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’ படம் அக்டோபர் 7ஆம் தேதி வெளியாகிறது

செய்திகள் 15-Jul-2016 11:06 AM IST Chandru கருத்துக்கள்

நர்ஸ் கெட்அப்பில் வித்தியாசமாக சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘ரெமோ’ படத்தை பாக்யராஜ் கண்ணன் அறிமுகப்படமாக இயக்குகிறார். ‘24 ஏஎம் ஸ்டுடியோஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டைட்டில் வெளியீட்டை இயக்குனர் ஷங்கர் தலைமையில் பிரம்மாண்டமாக நடத்தி அசத்தினார்கள். அதனைத் தொடர்ந்து அனிருத் இசையமைப்பில் உருவான ‘செஞ்சிட்டாளே...’, ‘அவனா... இவனா...’ ஆகிய பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘ரெமோ’ படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.

அக்டோபர் 7ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று ‘ரெமோ’ படம் உலகமெங்கும் ரிலீஸாகிறது. அதனைத் தொடர்ந்து வரும் திங்கிட்கிழமை, செவ்வாய் கிழமை ஆயுதபூஜை விடுமுறை நாட்கள் என்பதால் 5 நாள் வசூலை மொத்தமாக குவிக்க திட்டம் தீட்டியிருக்கிறது ‘ரெமோ’ டீம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹீரோ டீஸர்


;