பார்த்திபனின் ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’

கிரவுட் ஃபண்டிங் முறையில் தயாராகும் படம்!

செய்திகள் 15-Jul-2016 10:53 AM IST VRC கருத்துக்கள்

‘கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து பார்த்திபன் நடித்து, இயக்கி, தயாரிக்கும் படத்திற்கு ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ என்று பெயரிட்டுள்ளனர். ‘கிரவுட் ஃபண்டிங்’ என்ற முறையில் பலரது முதலீட்டில் தயாரிக்கும் இப்படத்தின் வேலைகள் நேற்று துவங்கியது. இந்த படத்திற்கு சத்யா இசை அமைக்கிறார். இப்படத்திற்காக மதன் கார்கி எழுதிய ‘கண் மூடினா தெரிவேன்…. எனை தொட நாடினால் மறைவேன்…’ என்று துவங்கும் பாடல் இளைஞ்ரகளை கவரும் விதமாக அமைந்துள்ளது என்கிறார்.

பார்த்திபன்! ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ படத்துடன் ‘கயல்’ சந்திரனுடன் ஒரு படம், சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணூ விஷால் நடிக்கும் ‘மாவீரன் கிட்டு’ ஆகிய படங்களிலும் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளார் பார்த்திபன். ‘கோடிட்ட இடங்களை நிரப்புக’ இளமை ததும்பும் படமாகவும் பெருமை தரும் படமாகவும் அமையும் என்றும் சொல்லியுள்ளார் பார்த்திபன்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;