மீண்டும் பெண்களை பெருமைப்படுத்த வரும் ஜோதிகா!

‘குற்றம் கடிதல்’ இயக்குனருடன் இணையும் ஜோதிகா!

செய்திகள் 15-Jul-2016 10:28 AM IST VRC கருத்துக்கள்

ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு ஜோதிகா நடித்து சமீபத்தில் வெளியான படம் ‘36 வயதினிலே’. ஒரு பெண் கேரக்டரை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இப்படம் ஜோதிகாவுக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இந்த படத்தை தொடர்ந்து மற்றுமொரு படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார் ஜோதிகா. தேசிய விருது பெற்ற ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கும் அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் ஜோதிகா! இந்த படமும் ‘36 வயதினிலே’ படத்தை போன்று பெண்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படமாம்! ‘36 வயதினிலே’ படத்தை தயாரித்த சூர்யாவின் ‘2டி என்டர்டெயின்மென்ட்’ நிறுவனமும் ‘கிரிஸ் பிக்சர்ஸ்’ நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் ஜோதிகாவுடன் நாசர், ஊர்வசி, பானுப்ரியா, சரண்யா, லிவிங்ஸ்டன் ஆகியோரும் நடிக்கிறார்கள். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் பூஜை நேற்று காலை சென்னை தரமணியிலுள்ள ஒரு கோயிலில் நடைபெற்றது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

போலந்தில் சூட் செய்த 24 படத்தின் மேக்கிங் - வீடியோ


;