3வது முறையாக ரஜினி பட டைட்டிலை பயன்படுத்தும் சுசீந்திரன்!

நான் மகான் அல்ல, பாயும் புலி படங்களைத் தொடர்ந்து 3வது முறையாக ரஜினி பட டைட்டிலை பயன்படுத்தியுள்ளார் சுசீந்திரன்

செய்திகள் 15-Jul-2016 10:19 AM IST Chandru கருத்துக்கள்

விஷால் நடிப்பில் வெளிவந்த ‘பாண்டியநாடு’ படத்திற்குப் பிறகு, உதயநிதி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஒப்புக்கொண்டார் இயக்குனர் சுசீந்திரன். ஆனால், சிற்சில காரணங்களால் அப்படம் ஒத்திவைக்கப்பட, தற்போது விஷ்ணு விஷாலை 3வது முறையாக இயக்கவிருக்கிறார் சுசீந்திரன், ‘ஜீவா’வைத் தொடர்ந்து இப்படத்திலும் விஷ்ணுவுக்கு ஜோடியாகியுள்ளார் ஸ்ரீதிவ்யா. இவர்களுடன் முக்கிய வேடத்தில் நடிகர் பார்த்திபனும், காமெடிக்காக நடிகர் சூரியும் சேர்க்கப்பட்டுள்ளனர். இப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை சூரியா கவனிக்க, டி.இமான் இசையைமக்கிறார். காசி விஸ்வநாதன் எடிட்டிங் செய்ய, சேகர் கலை இயக்கத்தை கவனிக்கிறார்.

இப்படத்திற்கு ‘மாவீரன் கிட்டு’ என பெயர் வைத்திருக்கிறார் சுசீந்திரன். ‘1985 காலகட்டத்தில் நம் தமிழகத்தில் மக்களின் உரிமைக்காக போராடிய ஒரு வீரனைப் பற்றிய திரைப்படம் இது...’ என படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நான் மகான் அல்ல, பாயும் புலி என ஏற்கெனவே ரஜினியின் இரண்டு சூப்பர்ஹிட் படத்தலைப்பைப் பயன்படுத்திய சுசீந்திரன், தற்போது ரஜினி நடிப்பில் வெளிவந்த ‘மாவீரன்’ படத்தலைப்புடன் கிட்டுவையும் சேர்த்து ‘மாவீரன் கிட்டு’ என பெயர் வைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;