காதல், டூயட் பாடல் இல்லாத படம் ‘கில்லி பம்பரம் கோலி’

மலேசியாவில் படமான ‘கில்லி பம்பரம் கோலி’

செய்திகள் 14-Jul-2016 1:06 PM IST VRC கருத்துக்கள்

‘ஸ்ரீசாய் ஃபிலிம் சர்க்யூட்’ என்ற பட நிறுவனம் சார்பில் டி.மனோஹரன் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘கில்லி பம்பரம் கோலி’. இப்படத்தில் தமிழ், பிரசாத், நரேஷ் ஆகிய புதுமுகங்கள் கதாநாயகர்களாக நடிக்க, புதுமுகம் தீப்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார். சந்தோஷ்குமார் வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, ‘தலைவாசல்’ விஜய், மலேசிய நடிகர் ஜோ, கே.ஆர்.விமல், ராஜசேகரன், சுரேஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். இசை அமைப்பாளர் மணி ஷர்மாவின் அண்ணன் மகன் ஒய்.ஆர்.பிரசாத் இசை அமைத்திருக்கும் இப்படத்தின் பாடல் மற்றும் டிரைலர் வெளியிட்டு விழா இன்று காலை சென்னையிலுள்ள கமலா திரையரங்கில் நடைபெற்றது. அப்போது படம் குறித்து இயக்குனர் மனோஹரன் நம்மிடம் கூறும்போது,

‘‘மலேசிய நாட்டில் வேலை செய்யும் மூன்று பசங்க, ஒரு பொண்ணு வெவ்வேறு சூழ்நிலையில் சந்தித்து நண்பர்கள் ஆகின்றனர்! அவர்கள் நல்ல நட்புடன் பழகி வரும்போது அந்த ஊரில் உள்ள ஒரு வில்லனிடம் ஏற்படும் பிரச்சனையினால் அவர்கள் அந்த ஊரை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆனால் அந்த ஊரை விட்டு வெளியேறாமல் இருந்து அந்த வில்லனை அழிக்க கத்தியின்றி, ரத்தமின்றி அவர்கள் எடுக்கும் ஆயுதம் தான் ‘கில்லி பம்பரம் கோலி’. இப்படத்தில் காதல், டூயட் பாடல் எதுவும் இல்லை! தூய நட்பை மையமாக வைத்து மலேசியாவில் எடுக்கப்பட்ட யதாரத்தமான படம் இது’’ என்றார்.

இப்படத்தின் பாடல்களை சினேகன் எழுதியிருக்கிறார். நாக கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். கலை இயக்கத்தை பழனிவேல் கவனித்துள்ளார். படத்தொகுப்பை பி.சாய்சுரேஷ் கவனித்துள்ளார் ‘கில்லி பம்பரம் கோலி’ விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

புது மெட்ரோ ரயில் வீடியோ பாடல் - சாமி 2


;