லாரன்ஸ், ரித்தகா சிங்கின் ‘சிவலிங்கா’விற்கு பூஜை!

கன்னடத்தில் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்ற ‘ஷிவலிங்கா’வின் தமிழ் ரீமேக்கிற்கான பூஜை நடைபெற்றது

செய்திகள் 14-Jul-2016 11:52 AM IST Chandru கருத்துக்கள்

பி.வாசு இயக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி பெரும் வெற்றிபெற்ற படம் ‘சிவலிங்கா’. இந்த படத்தை தமிழுக்கு ஏற்ற மாதிரி சில மாற்றங்கள் செய்து, ஒரே நேரத்தில் பி.வாசுவே தமிழிலும், தெலுங்கிலும் இயக்குகிறார். ராகவா லாரன்ஸ், ரித்திகா சிங் ஜோடியாக நடிக்கும் இப்படத்தில் வாசுவின் மகன் சக்தி வாசு ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, ‘சந்திரமுகி’ படத்தில் பி.வாசு இயக்கத்தில் நடித்த வடிவேலுவும் நடிக்கிறார். ‘வெற்றிவேல்’ படத்தை தயாரித்த ‘டிரைடன்ட் ஆர்ட்ஸ்’ ரவீந்திரன் இப்படத்தை தயாரிக்கிறார்.

பொங்கலுக்கு வெளியிட திட்டமிட்டிருக்கும் இப்படத்தின் பூஜை இன்று காலை நடைபெற்றது. இப்பூஜையில் ராதாரவி, பானுப்ரியா, ஊர்வசி, சக்தி வாசு ஆகியோர் உட்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர். தமன் இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு பெங்களூருவில் தொடங்குகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு சட்டை ஒரு பல்பம்


;