கர்நாடகாவைத் தவிர்த்த ஏரியாக்களில் ‘இருமுகன்’ வியாபாரம் முடிந்தது!

விக்ரம், நயன்தாரா, நித்யாமேனன் நடிப்பில் உருவாகிவரும் ‘இருமுகன்’ படத்தின் வியாபாரம் இப்போதே சூடுபிடித்துள்ளது.

செய்திகள் 14-Jul-2016 11:42 AM IST Chandru கருத்துக்கள்

‘10 எண்றதுக்குள்ள’ படத்தைத் தொடர்ந்து தற்போது சீயான் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் படம் ‘இருமுகன்’. விக்ரமுக்கு ஜோடியாக நயன்தாரா, நித்யா மேனன் நடித்திருக்கும் இப்படத்தை ‘அரிமா நம்பி’ ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கிறார். ‘புலி’ படத்தை தயாரித்த தமீம் ஃபிலிம்ஸ் இப்படத்தையும் தயாரித்துள்ளது. ‘இருமுகன்’ டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து வரும் 16ஆம் தேதி டி.இமான் இசையமைப்பில் உருவாகியுள்ள ‘ஹெலனா...’ என்ற பாடலின் டீஸரும் வெளியாக உள்ளது.

செப்டம்பரில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் ‘இருமுகன்’ படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ‘ஆரா சினிமாஸ்’ கைப்பற்றியிருக்கிறது. ஆந்திரா, தெலுங்கானா வெளியீட்டு உரிமையை என்கேஆர் ஃபிலிம்ஸ் வாங்கியிருக்கிறது. கேரளாவில் தமீம் ஃபிலிம்ஸ் நிறுவனமே வெளியிடுகிறது. தற்போது கர்நாடகா ரைட்ஸ் வியாபாரம் குறித்த பேச்சுவார்த்தகள் போய்க் கொண்டிருக்கிறதாம். விரைவில் அதுகுறித்த விவரமும் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;