‘கிருமி’ கதிரின் அடுத்த படம்?

‘போங்கு’ படத்தை தொடர்ந்து ‘சத்ரு’

செய்திகள் 14-Jul-2016 9:52 AM IST VRC கருத்துக்கள்

சமீபத்தில் ரிலீசாசி பத்திரிகைகளின் பாராட்டுக்களுடன் ஓரளவுக்கு ஓடிய படம் ‘கிருமி’. இப்படத்தில் கதாநாயகனாக நடித்த கதிர் அடுத்து நடிக்கும் படத்திற்கு ‘சத்ரு’ என்று பெயரிட்டுள்ளனர். இயக்குனர் ராதாமோகனிடம் அசோசியேட் இயக்குனராக பணிபுரிந்த நவீன் இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்தை தற்போது நட்டி நட்ராஜ், ருஹி சிங் நடிப்பில் ‘போங்கு’ என்ற படத்தை தயாரித்து வரும் திரு, தனது ‘ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டெயின்மென்ட்‘ நிறுவனம் சார்பில் தயாரிக்கிறார். ‘சத்ரு’ இந்நிறுவனத்தின் இரண்டாவது தயாரிப்பாகும். ‘போங்கு’ படத்தை செப்டம்பர் மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளனர். இப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு ‘சத்ரு’வின் படப்பிடிப்பு துவங்குமாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

என்னோடு விளையாடு - டிரைலர்


;