7 நாட்களில் ரெக்கார்ட் பிரேக் செய்த சுல்தான்!

சல்மான் நடிப்பில் ரம்ஜான் பண்டிகை முன்னிட்டு வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் முதல் நாட்களில் 200 கோடி நெட் வசூலை இந்தியாவில் மட்டும் பெற்றுள்ளது

செய்திகள் 13-Jul-2016 12:46 PM IST Chandru கருத்துக்கள்

சுல்தான் படம் வெளியான முதல்நாளே ‘இப்படம் பாலிவுட்டில் மிகப்பெரிய சாதனைகளைப் படைக்கும்’ என பல மீடியாக்கள் ஆரூடம் எழுதின. தற்போது அது உண்மையாகிவிட்டது. முதல் 5 நாட்களிலேயே உலகளவில் 320 கோடி ரூபாய் கிராஸ் வசூலைப் பெற்று சாதனை படைத்தது. இந்நிலையில், தற்போது புதிய சாதனை ஒன்றையும் படைத்திருக்கிறது சுல்தான். இப்படம் வெளியான முதல் 7 நாட்களில், இந்தியாவில் மட்டுமே 200 கோடிக்கும் அதிகமாக நெட் வசூலைக் குவித்து சாதனை படைத்திருக்கிறது. இந்திய அளவில் இதற்கு முன்பு 200 கோடி நெட் வசூலை, அமீர்கானின் பிகே, தூம் 3 மற்றும் சல்மான் கானின் ‘பஜிரங்கி பாய்ஜான்’ ஆகிய படங்கள் 9 நாட்களில் பெற்றன. ஆனால், இந்த சாதனையை 7 நாட்களில் செய்து ரெக்கார்ட் பிரேக் செய்திருக்கிறது சுல்தான்.

இந்திய அளவில் அதிகம் நெட் வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் தற்போது 5வது இடத்தில் இருக்கிறது சுல்தான். சென்னை எக்ஸ்பிரஸ், தூம் 3, பஜிரங்கி பாய்ஜான், பிகே ஆகிய படங்களின் வசூலை முந்தி முதல் இடத்தைப் பிடிக்குமா சுல்தான்?

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுல்தான் - டிரைலர்


;