ஹைடெக் கார் திருடும் நட்டி நட்ராஜ், ருஹி சிங்!

ரோல்ஸ் ராய்ஸ் காரை திருடும் நட்டி நட்ராஜ்!

செய்திகள் 13-Jul-2016 12:29 PM IST VRC கருத்துக்கள்

கலை இயக்குனர் சாபு சிரிலிடம் உதவியாளராக பணி புரிந்த தாஜ் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் படம் ‘போங்கு’. இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக ருஹி சிங் நடிக்கிறார். இவர் 2014-ஆம் ஆண்டில் மிஸ் இந்திய அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்பதோடு மதூர் பண்டார்கர் இயக்கத்தில் ‘காலண்டர் கேர்ல்ஸ்’ என்ற ஹிந்தி படத்திலும் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘போங்கு’ குறித்து இயக்குனர் தாஜ் கூறும்போது, ‘‘ஹைடெக்காக கார் திருடும் நால்வர் பற்றிய கதை இது. அவர்கள் ஏன் திருடர்கள் ஆனார்கள்? அதனால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன? சவால்கள் என்ன? என்பதை சுவாரஸ்யமாகவும், பரபரப்பாகவும் இப்படத்தில் சொல்லி இருக்கிறோம். படத்தில் ஹீரோ நட்ராஜின் தோற்றாம் இதுவரை இல்லாத அளவிற்கு ஸ்டைலாக இருக்கும். இப்படத்தில் விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் கார் பயன்படுத்தப்பட்டு படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். இதற்காக அஹமதாபாத்தில் உள்ள ஒரு கார் ஷோரூமில் அனுமதி பெற்று படப்பிடிப்பு நடத்தியுள்ளோம். ரோல்ஸ் ராய்ஸ் கார் இப்பட்த்தில் முக்கிய பாத்திரமாக இருக்கும்’’ என்றார்.

‘ஆர்.டி.இன்பினிட்டி டீல் என்டர்டெயின்மென்ட்‘ பட நிறுவனம் சார்பாக திரு, ராஜரத்தினம், ஸ்ரீதரன் மூவர் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசை அமைக்கிறார். பாடல்களை தாமரை கபிலன், மதன் கார்க்கி ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் தற்போது நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நம்ம வீட்டு பிள்ளை - ட்ரைலர்


;