‘கிடாரி’யில் இணையும் கௌதம் மேனன்!

சசிகுமாருடன் இணையும் கௌதம் மேனன்!

செய்திகள் 13-Jul-2016 11:30 AM IST VRC கருத்துக்கள்

அறிமுக இயக்குனர் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் சசிக்குமார் கதாநாயகனாக நடித்து தயாரிக்கும் படம் ‘கிடாரி’. சசிகுமார் நடித்த ‘வெற்றிவேல்’ படத்தில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக நடித்த நிகிலா இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். ‘ராஜதந்திரம்’ படத்தில் காமெடியனாக நடித்த ‘தர்புக்கா’ சிவா இப்படத்திற்கு இசை அமைக்கிறார். இவர் இசையில் மோகன் ராஜ் எழுதி, அனிதா, வேல்முருகன் பாடியுள்ள ‘தலைகாலு புரியலையே..’ என்று துவங்கும் பாடலை வருகிற 15-ஆம் தேதி காலை 10 மணி அளவில் வெளியிடவிருக்கிறார் இயக்குனர் கௌதம் மேனன். இறுதிகட்ட படப்பிடிப்பில் இருந்து வரும் ‘கிடாரி’யின் இசை வெளியீடு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நாடோடிகள் 2 - டீஸர்


;