ரோட்டோரவாசிகளுக்கு தீடீர் சர்ப்ரைஸ் தந்த நடிகை ஹன்சிகா!

நடிகை ஹன்சிகா இரவு நேரத்தில் திடீர் விசிட் அடித்து ரோட்டோரத்தில் வசிக்கும் சென்னை நகர வாசிகளுக்கு பெட்ஷீட், வாட்டர் பாட்டில் வழங்கினார்

செய்திகள் 13-Jul-2016 10:13 AM IST Chandru கருத்துக்கள்

பிரபலங்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணத்தையும், புகழையும் தங்களுக்காக மட்டுமே பயன்படுத்திக் கொள்வதில்லை. அவ்வப்போது தங்களால் இயன்ற உதவிகளை இயலாதவர்களுக்கு செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பரந்த மனம் கொண்ட சினிமா பிரபலங்களில் நடிகை ஹன்சிகாவும் ஒருவர். தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின்போதும், ஒவ்வொரு குழந்தையை தத்தெடுத்து, இதுவரை 20க்கும் மேற்பட்ட குழந்தைகளின் கல்வி, பொருளாதார தேவைகளை முழுவதும் நிவர்த்தி செய்து வருகிறார் ஹன்சிகா.

அந்தவகையில், சமீபத்தில் இரவு நேரத்தில் திடீர் விசிட் அடித்த நடிகை ஹன்சிகா ரோட்டோரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் சென்னை நகரவாசிகளுக்கு பெட்ஷீட், வாட்டர்பாட்டில் போன்றவற்றை சத்தமில்லாமல் வழங்கிவிட்டுத் திரும்பியிருக்கிறார். ஒருசிலர் மட்டும் தூங்காமல் விழித்திருக்க, தூங்குபவர்களின் அருகில் பெட்ஷீட்டை அவர்களுக்குத் தெரியாமலேயே வைத்துவிட்டுத் திரும்பிய ஹன்சிகாவின் வீடியோ சமூகவலைளதங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோ இங்கே உங்களுக்காக..

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

100 ட்ரைலர்


;