விக்ரம் ரசிகர்கள் எதிர்பார்க்கும் ஜூலை 16!

விக்ரம், நயன்தாரா நடிப்பில் ஆனந்த் ஷங்கர் இயக்கும் ‘இருமுகன்’ படத்தின் ‘ஹெலனா...’ பாடல் டீஸர் ஜூலை 16 அன்று வெளியீடு

செய்திகள் 13-Jul-2016 9:58 AM IST Chandru கருத்துக்கள்

‘10 எண்றதுக்குள்ள’ படத்தைத் தொடர்ந்து தற்போது ஆனந்த் சங்கர் இயக்கத்தில் ‘இருமுகன்’ படத்தில் நடிக்கிறார் விக்ரம். நயன்தாரா, நித்யாமேனன் நாயகிகளாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிடைந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியிடப்பட்டது. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார். அவரின் இசையில் உருவான ‘ஹெலனா...’ என்ற பாடலின் டீஸரை வரும் 16ஆம் தேதி மாலை 7 மணிக்கு யு டியூபில் வெளியிடவிருக்கிறார்கள். விக்ரமுடன் இணைந்து நயன்தாரா முதல்முறையாக நடித்திருப்பதால், இருவரும் பங்குபெறும் அந்த பாடல் காட்சி எப்படி இருக்கும் என்பதைப் பார்க்க எதிர்பார்ப்புடன் காத்திருக்கிறார்கள் விக்ரம் ரசிகர்கள்.

‘புலி’ ஷிபு தமீன்ஸ் தயாரிக்கும், இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை ஆரா சினிமாஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஆகஸ்ட் 12ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;