அந்தமானில் படமாகிய அந்தமான்!

அந்தமானில் ரிச்சர்ட், மனோசித்ரா!

செய்திகள் 12-Jul-2016 2:12 PM IST VRC கருத்துக்கள்

ரிச்சர்ட், மனோசித்ரா கதாநாயகன், கதாநாயகியாக நடிக்கும் படம் ‘அந்தமான்’. ‘சுதா மூவீஸ் கிரியேஷன்ஸ்’ சார்பில் ஏ.கண்ணதாசன் தயாரிக்கும் இப்படத்தில் வில்லனாக தயாரிப்பாளர் கண்ணதாசன் நடிக்க, இப்படத்திற்கு இசை அமைத்திருக்கும் எஸ்.பி.எல்.செல்வநாதனும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்களுடன் ‘நிழல்கள்’ ரவி, ‘தலைவாசல்’ விஜய், மனோபாலா, சாம்ஸ், வையாபுரி, முத்துக்காளை, தியாகு, ‘நெல்லை’ சிவா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்தின் கதை, வசனம், பாடல்களை டி.ஆர்.எஸ்.மணி ஐயர் எழுதியுள்ளார். இவர் எழுத்தாளர் பாலகுமாரனை மானசீக குருவாக ஏற்றுக்கொண்டவர். இயக்குனர் எஸ்.பி.ஜனநாதனின் உதவியாளர் ஆதவன் திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். ‘அந்தமான்’ படம் குறித்து இயக்குனர் ஆதவன் கூறும்போது, ‘‘இதுவரை எந்த திரைப்படத்திலும் காட்டப்படாத அந்தமானின் பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது. கதாநாயகன் ரிச்சர்ட், கதாநாயகி மனோசித்ரா ஆடிப்பாடும் ஒரு பாடல் காட்சியையும், கதாநாயகன் வில்லனுடன் மோதும் படு பயங்கர சண்டை காட்சி ஒன்றையும் அந்தமான் கடற்பகுதியில் பிரம்மாண்ட கப்பல் ஒன்றில் படமாக்கியுள்ளோம். காதல், காமெடி, சென்டிமென்ட் கலந்த ஜனரஞ்சக படமாக உருவாகியுள்ள இப்படம் ரிச்சர்டுக்கு ஒரு திருப்பு முனை படமாக அமையும் என்பது என் நம்பிக்கை’’ என்றார்.
ரிலீசுக்கு தயாராகி வரும் ‘அந்தமான்’ படப் பாடல் வெளியீட்டு விழா நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இவ்விழாழில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

‘‘அரசியலில் ரஜினியைவிட கமலுக்கே என் ஆதரவு!’’ - நடிகர் ஆர்.கே.சுரேஷ்


;