‘கயல்’ சந்திரனுடன் இணையும் ‘பிச்சைக்காரன்’ நாயகி!

சந்திரனுக்கு ஜோடியாகும் ‘பிச்சைக்காரன்’ ஹீரோயின்!

செய்திகள் 12-Jul-2016 11:37 AM IST VRC கருத்துக்கள்

‘கயல்’ படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமான சந்திரன் நடிப்பில் அடுத்து உருவாகி வரும் படங்கள் ‘கிரகணம்’ மற்றும் ‘ரூபாய்’. இந்த படங்களை தொடர்ந்து மற்றுமொரு படத்தில் கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார் சந்திரன்! ‘நாளைய இயக்குனர்’ புகழ் சுதர்சன் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ‘பிச்சைக்காரன்’ பட புகழ் சாதனா டைட்டஸ் நடிக்கிறார். இவர்களுடன் பார்த்திபன் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்க, ‘இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ டானி, சாம்ஸ் ஆகியோரும் நடிக்கிறார்கள்.

இப்படத்தில் சந்திரன் ஒரு ஐ.டி. புரொஃபஷனலாக நடிக்கிறாராம்! முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க சென்னையிலேயே நடைபெறவிருக்கிறது. ‘2 MOVIE BUFF’ என்ற பட நிறுவனம் சார்பாக ரகுநாதன் தயாரிக்கும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற வெள்ளிக் கிழமை துவங்கவிருக்கிறது. இப்படத்திற்கு ‘நளனும் நந்தினியும்’ படத்திற்கு இசை அமைத்த அஷ்வத் நாகநாதன் இசை அமைக்கிறார். ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியத்தின் சிஷ்யரும், நடிகர் சந்திரனின் நெருங்கிய நண்பருமான மகேஷ் இப்படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆதித்ய வர்மா டீஸர்


;