‘வி.ஆர்.இன்டர்நேஷனல்’ நிறுவனம் சார்பில் வி.ரவி கதாநாயகனாக நடித்து தயாரித்துள்ள படம் ‘ஏகனாபுரம்’. இப்படத்தில் ரித்திகா, ஜோதிஷா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள். இவர்களுடன் ஜானகி, உமா, பூவிதா, நெலை சிவா, பவா லட்சுமணன், சங்கர், ராஜசிம்மன், மணிமாறன், செவ்வாழை, சிட்டிசன் மணி, குழந்தை நட்சத்திரங்கள் பார்த்தசார்தி, சந்துரு, ரேவதி சக்திவேல் ஆகியோரும் நடித்துள்ளன்ர்.
இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்கும் சுரேஷ் நட்சத்திரா படம் குறித்து கூறும்போது, ‘‘நான் யாரிடமுமும் உதவியாளராக பணியாற்றவில்லை. சொந்த திறமை மற்றும் இப்படத்தில் பணியாற்றியுள்ள டெக்னீஷியனகளின் உதவியுடன் இப்படத்தை இயக்கியுள்ளேன். இது முழுக்க முழுக்க கிராமத்தில் நடக்கும் ஒரு காதல் கதை! அதை சென்டிமென்ட், நகைச்சுவை, அதிரடி ஆக்ஷன் கலந்து இயக்கியுள்ளேன்’’ என்றார்.
இப்படத்திற்கு டி.எஸ்.மணிமாறன் இசை அமைத்துள்ளார். ஏ.எஸ்.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார்.பாடல்களை அறிவுமதி, இளைய கம்பன் யுகபாரதி, நெய்தலூர் சங்கப்பிள்ளை ஆகியோர் எழுதியுள்ளனர். இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர்கள் பேரரசு, நம்பிராஜன், பவித்ரன், தயாரிப்பாளர் சங்கத்தை சேர்ந்த பி.எல்.தேனப்பன், டி.சிவா, கதிரேசன் மற்றும் ஏராளமான திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் உட்பட பலர் நடிக்கும் படம் ‘இந்தியன்-2’. இந்த படத்தின்...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா இணைந்து நடித்த படம் ‘நானும் ரௌடிதான்’. இந்த படம்...