கொண்டாட்டத்திற்குத் தயாராகும் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள்!

‘கபாலி’யின் சென்சார் முடிவடைந்து அதிகாரபூர்வ ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதால் உற்சாகமாகியுள்ளனர் ரஜினி ரசிகர்கள்

செய்திகள் 12-Jul-2016 10:05 AM IST Chandru கருத்துக்கள்

‘கபாலி’ எப்போது ரிலீஸாகும் என ஆளாளுக்கு ஒரு தேதியை வெளியிட்டு ஜல்லி அடித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில், ‘கபாலி’யின் சென்சார் திங்கட்கிழமை நடைபெறுகிறது எனவும், படம் ஜூலை 22ஆம் தேதி உறுதியாக ரிலீஸாகிறது என்ற தகவலையும் கடந்த 9ஆம் தேதி நம் இணையதளத்தில் முதன்முதலாக வெளியிட்டிருந்தோம். தற்போது அந்த செய்தி 100% உண்மையாகியிருக்கிறது. நேற்று ‘கபாலி’யின் சென்சார் முடிவடைந்து படத்திற்கு க்ளீன் ‘யு’ சான்றிதழ் கிடைத்திருக்கிறது. 2 மணி 32 நிமிடங்கள் ஒட்ட நேரம் கொண்ட ‘கபாலி’யின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலாய் ஆகிய நான்கு மொழி வெர்ஷன்களும் உலகளவில் ஜூலை 22ஆம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார் தயாரிப்பாளர் தாணு. ரிலீஸுக்கு முந்தைய தினம் வெளிநாடுகளில் ‘கபாலி’ படத்தின் பிரீமியர் காட்சிகளும் நடைபெறவிருக்கின்றன.

ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டதால், தற்போது உற்சாகத்தின் உச்சத்தில் இருக்கிறார்கள் சூப்பர்ஸ்டார் ரசிகர்கள். இப்போதே, கட்அவுட், தோரணம், போஸ்டர், ரசிகர் மன்ற சிறப்புக்காட்சிக்கான ஏற்பாடுகள் என ஒரு மிகப்பெரிய திருவிழா கொண்டாட்டத்திற்கு தங்களை தயார்படுத்தி வருகிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;