‘வெண்ணிலா கபடி குழு’ படம் மூலம் தங்களது திரையுலக வாழ்க்கையைத் துவங்கிய இயக்குனர் சுசீந்திரனும், நடிகர் விஷ்ணு விஷாலும் மீண்டும் ‘ஜீவா’ மூலம் கூட்டணி அமைத்து வெற்றியைச் சுவைத்தார்கள். இப்போது இந்த கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்திருக்கிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் விஷ்ணுவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடிக்கிவிருக்கிறார் என கடந்த வாரம் செய்திகள் வெளியாகின. ஆனால், இப்போது விஷ்ணுவுக்கு இரண்டாவது முறையாக ஜோடியாகியிருக்கிறார் ஸ்ரீதிவ்யா. ஏற்கெனவே சுசீந்திரன் இயக்கிய ‘ஜீவா’ படத்திலும் விஷ்ணுவுக்கு ஜோடி ஸ்ரீதிவ்யாதான்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் பார்த்திபனும் நடிப்பதாகத் தெரிகிறது. வரும் 15ஆம் தேதி முதல் பழனியில் இப்படத்திற்கான படப்பிடிப்பு துவங்கும் எனத் தெரிகிறது. டி.இமான் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
பிரபல பாலிவுட் நடிகையான மல்லிகா ஷெராவத், கமல்ஹாசனின் ‘தசாவதாரம்’, சிம்புவின் ‘ஒஸ்தி’ ஆகிய படங்களில்...
ஜீவா சங்கர் இயக்கிய ‘அமரகாவியம்’, ‘எமன்’ ஆகிய படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் ஆல்பர்ட் ராஜா....
‘காக்க காக்க’, ‘திருட்டுப் பயலே’, ‘நான் அவனில்லை’ உட்பட பல படங்களில் நடித்துள்ள ஜீவன் அடுத்து...