நடிகர் விக்ரம் மகள் அக்ஷிதா, கெவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாந்தனின் மகன் மனு ரஞ்சித் ஆகிய இருவாரின் திருமண நிச்சயதார்த்தம் நேற்று சென்னையில் நடைபெற்றது. கெவின் கேர் குழுமத்தின் நிறுவனர் சி.கே.ரங்கநாதனின் மகன் மனு ரஞ்சித். இவரது தாயார் தேன்மொழி. இவர், கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மு.க.முத்துவின் மகள் ஆவார்! இதனால் இந்த நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலைஞர் கருணாநிதி கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார். இருவரின் குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இயக்குனர் ஷங்கர் கலந்துகொண்டுள்ளார். மற்றபடி திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் யாரும் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ரஞ்சித், அக்ஷிதா திருமண தேதி இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஒரு சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்த பிரேம்ஜி அமரன் ‘மாங்கா’ என்ற படத்தில் மூலம் கதாநாயகனாக...
இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவி இயக்குனராகவும், ‘அஞ்சனவித்தை’ என்ற குறும் படத்தை இயக்கி, தமிழக அரசின்...
‘அட்டகத்தி’ தினேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் ‘குண்டு’. இந்த படத்தை தொடர்ந்து தினேஷ் நடிக்க...