அஜித் படத்தில் ‘பிரேமம்’ நாயகி?

அஜித் படத்தில் காஜல் அகர்வால், சாய் பல்லவி?

செய்திகள் 11-Jul-2016 12:41 PM IST VRC கருத்துக்கள்

‘வீரம்’, ’வேதாளம்’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து சிவாவும், அஜித்தும் மீண்டும் இணையும் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. ‘AK57’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் கதாநாயகியாக காஜல் அகர்வால் நடிக்க இருக்கிறார் என்று கூறப்பட்டு வருகிறது! ஆனால் தயரிப்பு தரப்பிலிருத்து இதுவரை இதனை உறுதி செய்யப்படவில்லை. இந்நிலையில் இப்படத்தின் மற்றொரு முக்கியமான கேரக்டரில் ‘பிரேமம்’ பட புகழ சாய் பல்லவி நடிக்க இருக்கிறார் என்றும் அதற்கான பேச்சு வார்த்தைகளும் தற்போது நடந்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது. ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ டி.ஜி.தியாகராஜன் பிரம்மண்டமாக தயாரிக்கும் ‘AK57’ படத்திற்கு இசைக்கு அனிருத், ஒளிப்பதிவுக்கு வெற்றி, படத்தொகுப்புக்கு ஆண்டனி எல்.ரூபன், பாடல்களுக்கு கபிலன் வைரமுத்து ஆகியோர் பணியாற்றவிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவித்த படக்குழுவினர் காஜல் அகர்வால், சாய் பல்லவி குறித்த எந்த அதிகாரபூர்வ தகவலையும் இது வரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;