இந்திய திரைப்படங்களின் டீஸர், டிரைலர்களின் யு ட்யூப் சாதனையைப் பொறுத்தவரை அதிகபட்ச முறை பார்க்கப்பட்ட டிரைலராக, ‘க்ரிஷ் 3’ டிரைலர் சாதனையை முறியடித்து, ஷாருக் கானின் ‘தில்வாலே’ டிரைலரே இருந்து வந்தது. கடந்த வருடம் நவம்பரில் வெளியான ‘தில்வாலே’ டிரைலர் இதுவரை 2 கோடியே 56 லட்சத்திற்கும் மேற்பட்ட முறை பார்வையிடப்பட்டுள்ளது.
இந்த சாதனையை ரஜினியின் ‘கபாலி’ டீஸர் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால், கடைசி நேர திருப்பமாக ‘சுல்தான்’ படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதைத் தொடர்ந்து, அப்படத்தின் டிரைலருக்கு கடந்த ஒரு வாரமாக பெரிய அளவில் பார்¬யிடல்கள் கிடைத்து வருகின்றன. இதனால், ‘சுல்தான்’ டிரைலர், ரஜினியின் ‘கபாலி’ டீஸர், ரித்திக் ரோஷனின் ‘க்ரிஷ் 3’ டிரைலர் மற்றும் ஷாருக்கின் ‘தில்வாலே’ டிரைலரின் பார்வையிடல் எண்ணிக்கையைக் கடந்து இந்திய அளவிலான சாதனையில் முதல் இடத்தைக் கைப்பற்றியிருக்கிறது.
சுல்தான் டிரைலர் & 2 கோடியே 61 லட்சம்
தில்வாலே டிரைலர் & 2 கோடியே 56 லட்சம்
கபாலி டீஸர் & 2 கோடியே 48 லட்சம்
க்ரிஷ் 3 டிரைலர் & 2 கோடியே 46 லட்சம்
நடிகர் ரஜினிகாந்த் உலகப் புகழ்பெற்ற டிஸ்கவரி சேனலின் பியர் க்ரில்ஸுடன் சேர்ந்து ‘MAN VS WILD என்ற...
மாநகரம், கைதி ஆகிய படங்களை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கி...
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, சுனில் ஷெட்டி, யோகி பாபு, நிவேதா தாமஸ் ஆகியோர்...