விஜய்யுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்!

முதன் முதலாக விஜய்யுடன் இணையும் ஹாரிஸ் ஜெயராஜ்!

செய்திகள் 11-Jul-2016 11:19 AM IST VRC கருத்துக்கள்

‘மிருதன்’ படத்தை தொடர்ந்து ‘ரோமியோ ஜூலியட்’ இயக்குனர் லஷ்மண் இயக்கத்தில் ‘போகன்’ படத்தில் நடித்து வரும் ‘ஜெயம்’ ரவி அடுத்து ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். இது ‘ஜெயம்’ ரவி நடிக்கும் 21-ஆவது படமாகும். ‘பொய் சொல்லப் போறோம்’ படம் தவிர்த்து ஏ.எல்.விஜய் இயக்கிய அனைத்து படங்களுக்கும் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தான். ‘ஜெயம்’ ரவி நடிப்பில் உருவாகும் இப்படத்தின் மூலம் முதன் முதலாக ஹாரிஸ் ஜெயராஜுடன் இணையவிருக்கிறார் ஏ.எல்.விஜய்! ‘எங்கேயும் காதல்’ படத்திற்கு பிறகு மீண்டும் ‘ஜெயம்’ ரவியுடன் இணைகிறார் ஹாரிஸ் ஜெயராஜ்! தற்போது பிரபு தேவா, தமன்னா நடிப்பில் தமிழ், தெலுகு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வரும் ‘தேவி’ படத்தின் வேலைகள் முடிந்ததும் ‘ஜெயம்’ ரவி படத்தை இயக்கவிருக்கிறார் ஏ.எல்.விஜய்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கோமாளி ட்ரைலர்


;