5 நாட்களில் 300 கோடியைத் தாண்டிய சுல்தான் வசூல்!

சல்மான் கான் நடிப்பில் வெளியான ‘சுல்தான்’ படம் முதல் 5 நாட்களில் உலகளவிலான வசூலில் 300 கோடியைத் தாண்டியிருக்கிறது

செய்திகள் 11-Jul-2016 10:38 AM IST Chandru கருத்துக்கள்

இந்திய அளவில் இனி ஒரு படம் இப்படியொரு சாதனையை படைக்குமா என்பது சந்தேகமே. ஆம்... சல்மான் கான் நடிப்பில் கடந்த புதன்கிழமை வெளிவந்த ‘சுல்தான்’ படம் வசூல் சக்கரவர்த்தியாக ஜொலித்துக் கொண்டிருக்கிறது. உலகளவில் 5000த்திற்கும் அதிகமான திரையரங்குளில் வெளியான ‘சுல்தான்’ திரைப்படம் முதல் 2 நாட்களிலேயே உலகளவிலான வசூலில் 110 கோடியைத் தாண்டியது. இந்நிலையில் இப்போது முதல் 4 நாட்களுக்கான வசூல் நிலவரங்களை வெளியிட்டுள்ளது பாலிவுட் டிரேட் வட்டாரங்கள். அதன்படி, முதல் 4 நாட்களில் ‘சுல்தான்’ படம் இந்தியாவில் 205 கோடி கிராஸ் வசூலையும் (நெட் வசூல் 142 கோடி), வெளிநாடுகளில் 58 கோடி வசூலையும், ஒட்டுமொத்தமாக 4 நாட்களில் 263 கோடி வசூலித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியாவில் விடுமறை தினம் என்பதால், எப்படியும் 50 கோடிக்கு மேல் வசூலாகியிருக்க வாய்ப்பிருக்கிறது. அதோடு வெளிநாட்டிலும் நேற்று 15 கோடிக்கு மேல் வசூலாகியிருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் முதல் 5 நாட்களில் மட்டும் ‘சுல்தான்’ படம் உலகளவில் 320 கோடிக்கும் அதிகமாக வசூலித்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்திய அளவில் இதுவரை எந்தத் திரைப்படத்திற்கும் இவ்வளவு பெரிய வசூல் முதல் 5 நாட்களில் கிடைத்ததில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுல்தான் - டிரைலர்


;