4 நாடுகளில் படமாகும் அஜித்குமாரின் ‘AK 57’!

தயாரிப்பு தரப்பால் ‘AK 57’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள அஜித்தின் புதிய பட படப்பிடிப்பை 4 நாடுகளில் நடத்தத் திட்டமிட்டிருக்கிறார்களாம்

செய்திகள் 11-Jul-2016 9:55 AM IST Chandru கருத்துக்கள்

‘சிறுத்தை’ சிவா இயக்கத்தில் அஜித் நடித்த முந்தைய இரண்டு படங்களும் சிட்டி மற்றும் கிராமத்துப் பின்னணியை மையமாக வைத்து கமர்ஷியல் மசாலாவாக வெளிவந்து வெற்றிபெற்ற சூழ்நிலையில், தங்கள் கூட்டணியில் உருவாகும் புதிய படத்தை முழுக்க முழுக்க வெளிநாடுகளிலேயே படமாக்க திட்டமிட்டுள்ளார்களாம். கடந்த வாரம் நடைபெற்ற இப்படத்தின் பூஜையைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் பல்கேரியாவுக்குச் சென்று படப்பிடிப்பைத் துவங்கவிருக்கிறதாம் ‘AK 57’ டீம். அதனைத் தொடர்ந்து ஐரோப்பாவிலுள்ள சில நாடுகளிலும், அதன் பிறகு இந்தியாவிலும் ஷூட்டிங் தொடரும் என்கிறார்கள். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் நடிக்க முக்கிய நட்சத்திரங்கள் பலரும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள்.

லேட்டஸ்ட்டாக, ‘AK 57’ நட்சத்திரப்பட்டியலில் காஜல் அகர்வாலும், கருணாகரனும் இடம்பிடித்திருப்பதாகத் தெரிகிறது. ஆனாலும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் 2017ஆம் ஆண்டு பொங்கலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. படம் ஏப்ரல் 2017ல் வெளியாகலாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;