மீண்டும் ரிலீஸ் தள்ளுகிறது த்ரிஷாவின் ‘நாயகி’

த்ரிஷா நடிப்பில் உருவாகியிருக்கும் ஹாரர் த்ரில்லர் படமான ‘நாயகி’, சென்சாரில் தாமதமாவதால் மீண்டும் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது

செய்திகள் 11-Jul-2016 9:52 AM IST Chandru கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு என ஒரே நேரத்தில் இருமொழிகளில் உருவாகிவரும் த்ரிஷாவின் ‘நாயகி’ திரைப்படத்தின் ரிலீஸ் மீண்டும் மீண்டும் தாமதமாகி வருகிறது. வித்தியாசமான காலகட்டத்தில் நடக்கும் கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘நாயகி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் எப்போதோ முடிவடைந்துவிட்டன. இப்படத்திற்குப்பின்பு, மாதேஷ் இயக்கத்தில் த்ரிஷா நடிக்க ஒப்புக்கொண்ட ‘மோகினி’ என்ற இன்னொரு ஹாரர் படமே அதற்குள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது.

இத்தனைக்கும், ‘நாயகி’ படம் வரும் 15ஆம் தேதி வெளியாகும் என கடந்த வாரமே அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அதற்கான தெலுங்கு போஸ்டர்களும் இணையத்தில் வெளியாகின. ஆனால், இப்போது மீண்டும் ரிலீஸ் தள்ளும் சூழல் ஏற்பட்டுள்ளது. காரணம், ‘நாயகி’ படத்தை சென்சாருக்கு அனுப்பியும், அதிகாரிகள் இன்னும் அப்படத்தைப் பார்க்கவில்லையாம்.

கோவர்தன் ரெட்டி இயக்கியுள்ள இப்படத்தை த்ரிஷாவின் மேனஜரான கிரிதர் மமிடிபல்லியுடன் இணைந்து கணேஷ் வெங்கட்ராம் தயாரித்துள்ளார். கோவை சரளா, மனோபாலா, பிரம்மானந்தம் உட்பட பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்திருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பரமபதம் விளையாட்டு - ட்ரைலர்


;