அமெரிக்காவில் மட்டும் 450 ஸ்கிரீன்ஸ் : ‘கபாலி’ சாதனை!

அமெரிக்காவில் மட்டும் 450 ஸ்கிரீன்ஸ் : ‘கபாலி’ சாதனை!

செய்திகள் 9-Jul-2016 11:11 AM IST Chandru கருத்துக்கள்

சூப்பர்ஸ்டாரின் ‘கபாலி’ தரிசனம் இந்த மாதமே கிடைக்குமா? அல்லது அடுத்த மாதம் வரை காத்திருக்க வேண்டுமா என ஏங்கிக் கொண்டிருந்த ரஜினி ரசிகர்களுக்கு நல்ல செய்தி கிடைத்துவிட்டது. இம்மாதம் 22ஆம் தேதி ‘கபாலி’ உலகளவில் 4 மொழிகளில் வெளியாவது உறுதியாகிவிட்டது. வரும் திங்கட்கிழமை ‘கபாலி’ சென்சாருக்குச் செல்கிறது. ஜூலை 21ஆம் தேதி வெளிநாடுகளில் பிரீமியர் ஷோக்களும் நடைபெற உள்ளன.

இந்நிலையில், புதிய சாதனை ஒன்றை படைக்கவிருக்கிறது ‘கபாலி’. இப்படத்தின் அமெரிக்க வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ள ‘சினி கேலக்ஸி’ நிறுவனம் ‘கபாலி’க்காக மட்டும் 450 ஸ்கிரீன்களை ஒப்பந்தம் செய்து வைத்திருக்கிறதாம். இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் இதுவரை எந்த இந்திய படமும் ரிலீஸ் ஆகவில்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கெனவே சூர்யாவின் ‘24’ மற்றும் விஜய் ‘தெறி’ படங்களை இதே சினி கேலக்ஸி நிறுவனம்தான் அமெரிக்காவில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சூரரைப் போற்று டீஸர்


;