‘கபாலி’ பட இயக்குனர் திறந்து வைத்த ‘ஏஞ்சலா ஸ்டுடியோஸ்’

அனைத்து வேலைகளுக்கும் ஏஞ்சலா ஸ்டுடியோஸ்!

செய்திகள் 8-Jul-2016 4:06 PM IST VRC கருத்துக்கள்

திரைப்படம், விளம்பர படங்கள், குறும்படம் இசை ஆல்பம் ஆகியவற்றிற்கான எடிட்டிங், டப்பிங், இசை ரிக்கார்டிங், கலர் கரெக்‌ஷன், விளம்பர டிசைன் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டுமானால் ஒவ்வொரு துறையை சேர்ந்த இடத்தை தேடிக் கண்டு பிடிப்பது மிகவும் சிரம்மான காரியம்! தற்போது அந்த குறையை தீர்க்கும் விதமாக அமைந்துள்ளது ‘ஏஞ்சலா ஸ்டுடியோஸ்’. சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ஆழ்வார் திருநகரில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஸ்டுடியோவை ‘கபாலி’ பட இயக்குனர் ரஞ்சித் திறந்து வைத்தார். இதன் திறப்பு விழாவில் இசை அமைப்பாளர் கே., நடிகர் படவா கோபி ஆகியோரும் கலந்துகொண்டனர். A டூ Z சினிமா பணிகளுக்கான இடமாக அமைந்துள்ள இந்த ஸ்டுடியோவில் குறும் படம், விளம்பர படம் என அனைத்து பணிகளையும் மேற்கொள்ள வசதிகள் அமைக்கப்பட்டுள்ளது. லயோலா கல்லூரியில் விஷுவல் கம்யூனிகேஷன் படித்து, பிரபல சேனலில் பணியாற்றிய ராய் நவீன் மற்றும் சதீஷ் தேவராஜ் ஆகியோர் நிறுவியுள்ள இந்த ஸ்டுடியோவில் ’கண்ணப்பர்’ உள்ளிட்ட பல குறும்படங்கள், விழிப்புணர்வு படங்கள், கல்லூரி மற்றும் பொருட்களின் விளம்பர படங்கள், ஆகியவற்றின் மேக்கிங் பணிகள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;