2 நாளில் 100 கோடியை அள்ளிய ‘சுல்தான்’

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியான ‘சுல்தான்’ படம், உலகளவில் முதல் 2 நாட்களிலேயே 100 கோடி வசூலைப் பெற்றுள்ளது

செய்திகள் 8-Jul-2016 12:58 PM IST Chandru கருத்துக்கள்

யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், அலி அப்பாஸ் ஜாஃபர் இயக்கத்தில் சல்மான் கான், அனுஷ்கா சர்மா, ரன்தீப்கூடா நடிப்பில் கடந்த புதன்கிழமை வெளியான ‘சுல்தான்’ திரைப்படத்திற்கு மிகப்பெரிய வசூல் கிடைத்திருப்பதாக பாலிவுட் டிரேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளிவந்த இப்படம் தோராயமாக இந்தியாவில் 4350 திரையரங்குகளிலும், வெளிநாட்டில் 1100 திரையரங்களிலும் வெளியாகியிருக்கிறதாம்.

‘சுல்தான்’ பட டீஸர், டிரைலர் ஆகியவற்றிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்ததைத் தொடர்ந்து படத்தின் மீதான எதிர்பார்பார்ப்பு உச்சபட்சமாக உயர்ந்தது. இதனால் ‘சுல்தான்’ படத்திற்கான முதல் 5 நாள் முன்பதிவு டிக்கெட்டுகள் அனைத்தும் சில மணி நேரங்களிலேயே விற்றுத்தீர்ந்தாம்.

‘சுல்தான்’ படத்திற்கு முதல் நாளில் இந்தியாவில் 36 கோடி ரூபாய் நெட் வசூலும் (கிராஸ் வசூல் 50 கோடி), வெளிநாடுகளில் 20 கோடி ரூபாய் வசூலும் கிடைத்துள்ளதாம். முதல் நாளைவிட இரண்டாம் நாள் வசூல் அதிகம் இருக்கும் எனவும் பாலிவுட் டிரேட் அனலிஸ்ட் தரன் ஆதர்ஷ் தெரிவித்துள்ளார். இதனால் உலகளவில் ‘சுல்தான்’ படத்திற்கு 2 நாட்களிலேயே 110 கோடிக்கும் அதிகமான வசூல் கிடைத்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுல்தான் - டிரைலர்


;