‘சபாஷ் நாயுடு’ படத்தின் 42 நிமிட காட்சிகள் ரெடி!

ஒரே நேரத்தில் மூன்று மொழிகளில் கமல் இயக்கி நடிக்கும் ‘சபாஷ் நாயுடு’ படத்தின் 42 நிமிட காட்சிகள் எடிட் செய்யப்பட்டுவிட்டதாக கமல் அறிவிப்பு

செய்திகள் 8-Jul-2016 11:48 AM IST Chandru கருத்துக்கள்

கடந்த மாதம் 6ஆம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸில் படப்பிடிப்பு துவங்கப்பட்ட ‘சபாஷ் நாயுடு’ படத்தின் வெளிநாட்டு போர்ஷனுக்கான படப்பிடிப்பை முடித்துவிட்டு, ஜூலையில் சென்னைக்குத் திரும்பிய கமல் டீம், எடுக்கப்பட்ட காட்சிகள் வரைக்குமான போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் தற்போது துரிதமாக முடித்திருக்கிறது. தமிழ், தெலுங்கில் ‘சபாஷ் நாயுடு’ எனவும், ஹிந்தியில் ‘சபாஷ் குண்டு’ எனவும் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் 42 நிமிட காட்சிகளும், ஸ்ருதிஹாசன் பங்குபெற்ற பாடல் ஒன்றும் எடிட் செய்யப்பட்டுவிட்டதாக கமல்ஹாசன் தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் தெரிவித்திருக்கிறார். விரைவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு குறித்த அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டி.கே.ராஜீவ்குமாருக்குப் பதிலாக கமலே இயக்கி, அவரே நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ஸ்ருதிஹாசன், ரம்யா கிருஷ்ணன், மனு நாராயணன், பிரம்மானந்தம் (தமிழ், தெலுங்கு), சௌரப் சுக்லா (ஹிந்தி) உட்பட பலர் நடிக்கிறார்கள். இளையராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு ஜெய கிருஷ்ணா கம்மாடி ஒளிப்பதிவு செய்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

விஸ்வரூபம் 2 மேக்கிங் வீடியோ


;