முதல் நாளில் கணிசமான ‘துட்டை’ அள்ளிய சந்தானம் படம்!

சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தில்லுக்கு துட்டு’ படம் முதல் நாளில் நல்ல வசூலைக் குவித்துள்ளது

செய்திகள் 8-Jul-2016 11:29 AM IST Chandru கருத்துக்கள்

‘லொள்ளு சபா’ புகழ் ராம்பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்து நேற்று வெளியான ‘தில்லுக்கு துட்டு’ படம், அவர் நாயகனாக நடித்து வெளிவந்த படங்களிலேயே மிகப்பெரிய ஓபனிங் கிடைத்துள்ள படமாக அமைந்திருக்கிறது. ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வெளியிட்டுள்ள இப்படம் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 4 கோடி ரூபாய் வசூலித்திருப்பதாக கூறப்படுகிறது. அவரின் முந்தைய படங்களான வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களைவிட இது பெரிய தொகையாகும்.

விமர்சனரீதியாக இருவேறு கருத்துக்களை இப்படம் சந்தித்த போதும், ரசிகர்கள் மத்தியில் சந்தானத்திற்கு இருக்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு காரணமாக இந்த வசூல் கிடைத்திருப்பதாக டிரேட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, ஹாரர் படங்களை தொடர்ந்து வெளியிட்டு வரும் ஸ்ரீ தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் வெளியீடு, ரம்ஜான் பண்டிகை விடுமுறை தினம், வேறு பெரிய படங்கள் எதுவும் களத்தில் இறங்காதது போன்றவையும் ‘தில்லுக்கு துட்டு’ படத்திற்கு பெரிய ஓபனிங் கிடைக்க காரணங்களாக கூறப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

A1 டீஸர் 2


;