தான் இயக்கி நடித்து வெளிவந்த ‘அப்பா’ படத்திற்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளதால், தற்போது தன் அடுத்த படத்திற்கான ஸ்கிரிப்ட் வேலையில் உற்சாகமாக களமறிங்கியிருக்கிறார் சமுத்திரக்கனி. தற்காலிகமாக ‘தொண்டன்’ என பெயரிடப்பட்டிருக்கும் இப்படத்தில் ஜெயம் ரவி நாயகனாக நடிக்கவிருக்கிறாராம். ஏற்கெனவே சமுத்திரக்கனி இயக்கத்தில் ‘நிமிர்ந்து நில்’ படத்தில் ஜெயம் ரவி இரட்டை வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
‘தொண்டன்’ படத்தின் கதையை தன் நண்பரும், இயக்குனர், நடிகருமான சசிகுமாருக்காகதான் முதலில் உருவாக்கியிருந்தாராம் சமுத்திரக்கனி. ஆனால், அவரின் கால்ஷீட் ஒத்துவராத காரணத்தால் தற்போது இப்படம் ஜெயம் ரவி வசம் வந்திருக்கிறது. தன் கனவுப் படமான ‘கிட்னா’வை முடித்துவிட்டு, ‘தொண்டன்’ படத்தில் சமுத்திரக்கனி களமிறங்குவார் எனத் தெரிகிறது.
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து...
‘பாகுபலி’, ‘பாகுபலி-2’ ஆகிய படங்களின் மிகப் பெரிய வெற்றியை தொடர்ந்து ராஜமௌலி இயக்கி வரும் படம்...
மணிரத்னத்தின் கனவு திரைப்படமான ‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில்...