மீனவர்களின் வாழ்க்கையை சொல்லும் உள்குத்து!

‘உள்குத்து’வில் அனைத்தும் உண்டு!

செய்திகள் 8-Jul-2016 10:37 AM IST VRC கருத்துக்கள்

‘கெனன்யா ஃபிலிம்ஸ்’ ஜெ.செல்வகுமார் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘உள்குத்து’ திரைப்படம் விரைவில் வெளியாகவிருக்கிறது. ‘அட்டகத்தி’ தினேஷ், நந்திதா கதாநாயகன், கதாநயகியாக நடித்துள்ள இப்படத்தில் பாலசரவணன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமன், திலீப் சுப்பராயன் மற்றும் பலர் நடித்துள்ளனர். கார்த்திக் ராஜு இயக்கியுள்ள இப்படம் குறித்து அவர் கூறும்போது,

‘குமரி மாவட்டத்தின் பிரபலமான முட்டம் குப்பத்திலும் அதனை சுற்றியுள்ள கிராம்ஙக்ளிலும் உள்குத்தை படமாக்கியுள்ளோம். இறால் மீனையும், வஞ்சிரம் மீனையும் பேரம் பேசி வாங்க தெரிந்த நமக்கு மீனவர்களின் கடினமான வாழ்க்கை பற்றி தெரியாது. மீனவ சமூகத்தினரின் வாழ்க்கையையும் அவர்களின் துன்பங்களையும் அவர்கள் எதிர்நோக்கும் சவால்களைய்ம் மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் சென்டிமெண்ட், காதல், அதிரடி ஆக்‌ஷன் என அனைத்து விஷயங்களும் உண்டு. இதற்கு ஒரு சான்றாக உருவாக்கப்பட்டு சமீபத்தில் வெளியிடப்பட்ட இப்பத்தின் டீசருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதை கண்டு நாங்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம். ரசிகர்களுக்கு இப்படம் கண்டிப்பாக பிடிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது’’ என்றார்.
இப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகர் இசை அமைத்துள்ளார். ‘குக்கூ’ பட புகழ் பி.கே.வர்மா ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘அபி & அபி’ நிறுவன அதிபர் அபினேஷ் இளங்கோவன் விநியோகம் செய்யும் ‘உள்குத்து’ ஆகஸ்ட் மாதம் திரைக்கு வருமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு ட்ரைலர்


;