கிருஷ்ணாவின் ‘யாக்கை’யில் தனுஷ், விக்னேஷ் சிவன்!

விக்னேஷ் சிவன் பாடலுக்கு தனுஷ் குரல்!

செய்திகள் 6-Jul-2016 5:24 PM IST VRC கருத்துக்கள்

‘கழுகு’, ‘யாமிருக்க பயமே’ உட்பட பல படங்களில் நடித்திருக்கும் கிருஷ்ணா நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படம் ‘யாக்கை’. ‘ஆண்மை தவறேல்’ படத்தை இயக்கிய குழந்தை வேலன் இயக்கி வரும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கிருஷ்ணா, ஸ்வாதி ஜோடியாக நடிக்கும் ‘யாக்கை’க்காக விக்னேஷ் சிவன எழுதிய ஒரு பாடலை யுவன் சங்கர் ராஜா இசையில் பாடியுள்ளார் தனுஷ்! ஏற்கெனவே இப்படத்திற்காக யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து பாடியுள்ள, ‘நீ எந்நாளும்…’ என்று துவங்கும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் விக்னேஷ் சிவன் எழுதி, தனுஷ் பாடியுள்ள ‘உனக்கு வெயிட் பண்ணி என் பாடி வீக் ஆகுது… பேஸ்மென்ட் ஷேக் ஆகுது… ஹார்டு பிரேக் ஆகுது’ என்று துவங்கும் பாடலும் இளம் ரசிகர்களை மிகவும் கவரும் விதமாக அமைந்திருப்பதாக ‘யாக்கை’ படக் குழுவினர் தெரிவித்துள்ளார்கள். ‘ப்ரிம் பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் முத்துக்குமரன் தயாரித்துள்ள ‘யாக்கை’யின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வர, விரைவில் இப்படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;