ஹாலிவுட் இயக்குனர் ஸ்பீல்பர்க் படத்திற்கு நாசர் குரல்!

ஹாலிவுட் படத்திற்கு குரல் கொடுக்கும் நாசர்!

செய்திகள் 6-Jul-2016 4:22 PM IST VRC கருத்துக்கள்

‘ஈடி’, ‘ஜுராசிக் பார்க்’, ‘அட்வென்சர்ஸ் ஆஃப் டின் டின்’ உள்ளிட்ட வசூலில் சாதனை படைத்த ஏராளமான ஹாலிவுட் படங்களை இயக்கிய ஸ்டிவன் ஸ்பீல்பர்கின் அடுத்த பிரம்மாண்ட படைப்பு ‘தி பிஎஃப்ஜி’ (THE BFG). இம்மாதம்15-ஆம் தேதி உலகம் முழுக்க வெளியாகவிருக்கும் இப்படத்தின் சிறப்பு என்னவென்றால் இந்த தலைமுறையின் சிறந்த கதாசிரியர்களான ரோல் டால், வால்ட் டிஸ்னி, ஸ்டிவன் ஸ்பீல்பர்க் ஆகியோர் படத்தில் இணைந்திருப்பது தான்! அதிசயங்கள் மற்றும் ஆபத்துக்கள் நிறைந்த, மிகப் பெரிய மனிதர்கள் வாழும் நாட்டிற்கு ஒரு இராட்சத மனிதன் ஒரு சிறுமியை அழைத்து செல்கிறான். அந்த நாட்டில் அந்த சிறுமி சந்திக்கும் சம்பவங்கள் தான் படத்தின் கதைக்களம்! மிகப் பிரம்மாண்டமான முறையில் உருவாகியிருக்கும் இப்படம் இந்தியாவில் ஆங்கிலம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளிலும் வெளியாகிறது. இந்தியாவில் ‘ரிலையன்ஸ் என்டர்டெயின்மென்ட்’ நிறுவனம் வெளியிடும் இப்படத்தின் தமிழ் பதிப்புக்கு நடிகர் நாசர் குரல் கொடுத்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு கிடாயின் கருணை மனு - டிரைலர்


;