சீனுராமசாமி இயக்கத்தில் மம்முட்டி?

மம்முட்டியிடம் கதை சொன்ன சீனுராமசாமி!

செய்திகள் 6-Jul-2016 4:03 PM IST VRC கருத்துக்கள்

சீனுராமசாமி இயக்கத்தில் ‘இடம் பொருள் ஏவல்’, ‘தர்மதுரை’ ஆகிய இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. இதில் விஜய்சேதுபதி, தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘தர்மதுரை’ திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து சீனுராமசாமி தனது அடுத்த பட தைவேலைகளையும் துவங்கி விட்டார். சமீபத்தில் சீனுராமசாமி மலையாள மெகா ஸ்டார் மம்முடியை சந்தித்து ஒரு கதையை சொல்லியுள்ளார். அந்த கதையை கேட்ட மம்முட்டி, ‘‘நாம் மீண்டும் சந்திப்போம். அப்போது கதையை முழுமையாக பேசிவிட்டு ஒரு முடிவுக்கு வரலாம்’’ என்று கூறினாராம்! இதனை தொடர்ந்து மம்முட்டியுடனான அடுத்த சந்திப்புக்கு காத்திருக்கிறார் சீனுராமசாமி! மம்முட்டிக்கு சீனுராமசாமி சொல்லும் கதை பிடிக்கும் பட்சத்தில் விரைவில் இருவரும் ஒரு தமிழ் படத்தில் இணைவது உறுதி! மம்முட்டியுடனான இந்த சந்திப்புக்கு சீனுராமசாமிக்கு பெரிதும் உதவியவர் இயக்குனர் ராம் தானாம்! தற்போது ‘தரமணி’ படத்தை இயக்கி வரும் ராம், மம்முட்டி, அஞ்சலி நடிப்பில் ‘பேரன்பு’ என்ற படத்தையும் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;