‘பைசா’ நாயகி நடிக்கும் ‘பெப்பே’

அறிமுக இயக்குனர் இயக்கும் ‘பெப்பே’

செய்திகள் 6-Jul-2016 3:46 PM IST VRC கருத்துக்கள்

இயக்குனர்கள் வி.சி.குகநாதன், மகேஷ், பாலன், ராமநாதன் ஆகியோரிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஜி.ஆர்.ராஜ்தேவ் இயக்கும் முதல் படம் ‘பெப்பே’. இப்படத்தில் புதுமுகம் விஜய் அரவிந்த் கதாநாயகனாக அறிமுகமாக, ‘பைசா’ படத்தில் நடித்த ஆரா கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் பன்னீர், இமான் அண்ணாச்சி, ராமச்சந்திரன், தீனா, தேவிப்பிரியா, நெல்லை சிவா ஆகியோரும் நடிக்கின்றனர். இப்படத்திற்கு ஜெனி சாமுவேல் இசை அமைக்க, ஜி.கே.ரவிகுமார் ஒளிப்பதிவு செய்கிறார். ‘TMR TEAM’ என்ற நிறுவனம் தயாரித்திக்கும் இப்படம் காதல், நகைச்சுவை கலந்த ஜனரஞ்சகமாக உருவாகியுள்ளது என்றும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா விரைவில் நடைபெறவிருக்கிறது என்றும் படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அருவி - அசைந்தாடும் மயில் பாடல் வீடியோ


;