சூப்பர்ஸ்டாரின் லேட்டஸ்ட் ‘பஞ்ச்’சை தலைப்பாக்கிய விக்ரம் பிரபு!

‘நெருப்புடா’ என ரஜினி உதிர்த்த வார்த்தைதான் இப்போது சூப்பர்ஸ்டார் ரசிகர்களின் தாரக மந்திரம். அதையே படத்தலைப்பாக்கியிருக்கிறார் விக்ரம் பிரபு

செய்திகள் 6-Jul-2016 10:05 AM IST Chandru கருத்துக்கள்

‘இது என்ன மாயம்’ படத்திற்குப் பிறகு வாகா, வீர சிவாஜி, முடி சூடா மன்னன் என ஒரே நேரத்தில் 3 படங்களில் பிஸியாக இருக்கிறார் நடிகர் விக்ரம் பிரபு. இதில் ‘வாகா’ படத்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிடத் திட்டமிட்டிருக்கிறார்கள். இந்நிலையில், ‘ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட்’ என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் துவங்கியுள்ள நடிகர் விக்ரம் பிரபு, அதன் முதல் தயாரிப்பில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நிக்கி கல்ராணி நடிக்கிறார்.

‘கபாலி’ படத்தில் ரஜினி உதிர்த்த ‘நெருப்புடா’ என்ற ‘பஞ்ச்’ வசனத்தையே, தன் நிறுவனத்தின் முதல் தயாரிப்பிற்கு தலைப்பாக சூட்டியிருக்கிறார் விக்ரம் பிரபு. இப்படத்தை ‘ரோமியோ ஜூலியட்’டில் பணிபுரிந்த அசோக்குமார் அறிமுக படமாக இயக்குகிறார். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ‘முண்டாசுப்பட்டி’, ‘ஜோக்கர்’ புகழ் ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். ‘நெருப்புடா’ படத்தில் நடிகர் விக்ரம் பிரபு ஃபயர் எஞ்சின் டிரைவராகவும், தீவிர ரஜினி ரசிகராகவும் நடிக்கிறார். முக்கியமான வேடமொன்றில் நடிகர் பொன் வண்ணனும் இப்படத்தில் நடிக்கிறார்.

இன்று காலை சிவாஜி இல்லத்தில் ‘நெருப்புடா’ படத்திற்கான பூஜை மற்றும், தயாரிப்பு நிறுவன அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவில் பிரபு, விக்ரம் பிரபு ஆகியோருடன் ‘கபாலி’ தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணுவும் கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;