மணிரத்னம், கார்த்தி படத்தில் ஆர்.ஜே.பாலாஜி!

மகிழ்ச்சியில் ஆர்.ஜே.பாலாஜி!

செய்திகள் 5-Jul-2016 11:35 AM IST VRC கருத்துக்கள்

‘காஷ்மோரா’வை தொடர்ந்து கார்த்தி, மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்கிறார். வருகிற 8-ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை அதிதி ராவ் கதாநாயகியாக நடிக்கிரார். இவர்களுடன் ஆர்.ஜே.பாலாஜியும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இதனை ஆர்.ஜே.பாலாஜியே தனது ட்விட்டர் பக்கம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். மணிரத்னம் இயக்கத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது குறித்து ஆர்.ஜே.பாலாஜி கருத்து தெரிவிக்கையில், ‘என் கனவு நிஜமாகியுள்ளது. இந்த வாய்ப்பு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில் வெளியான ஜெய்யின் ‘வடகறி’, விஜய்சேதுபதியின் ‘நானும் ரௌடி தான்’ ஆகிய படங்களில் ஆர்.ஜே.பாலாஜியின் பங்களிப்பு சிறப்பாக அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சங்கத்தமிழன் ட்ரைலர்


;