தனுஷ் எம்.எல்.ஏ.யுடன் இணையும் நிஜ எம்.எல்.ஏ.!

‘வட சென்னை’யில்  கருணாஸ்!

செய்திகள் 5-Jul-2016 11:14 AM IST VRC கருத்துக்கள்

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படம் ‘வட சென்னை’. சமீபத்தில் படப்பிடிப்பு துவங்கிய இப்படத்தில் தனுஷ் எம்.எல்.ஏ.வாக நடிக்கிறார். இந்த தகவலை சமீபத்தில் வெளியிட்டிருந்தோம். இப்போது இப்படம் குறித்த மற்றொரு தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் த்னுஷுடன் கருணாஸும் ஒரு முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏ. ஆனவர் கருணாஸ்! இந்நிலையில் தனுஷ் எம்.எல்.வாக நடிக்கும் ‘வட சென்னை’யில் அவருடன் நிஜ எம்.எல்.ஏ.வான கருணாஸ் இனைந்துள்ளார். ஆனால் இப்படத்தில் கருணாஸுக்கு என்ன கேரக்டர் என்பது தெரியவில்லை.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பட்டாஸ் ட்ரைலர்


;