மீண்டும் தமிழுக்கு வரும் நந்திதா தாஸ்!

சமுத்திரகனி படத்தில் நந்திதா தாஸ்!

செய்திகள் 5-Jul-2016 10:50 AM IST VRC கருத்துக்கள்

‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ போன்ற படங்களில் நடித்த நந்திதா தாஸ் கடைசியாக நடித்த தமிழ் படம் ‘நீர்ப்பறவை’. இந்த படத்தை தொடர்ந்து ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு
மீண்டும் தமிழுக்கு வருகிறார் நந்திதா தாஸ். பெண்கள் பிரச்சனைகளை மைய கருவாக வைத்து எழுத்தாளரும், பாடலாசிரியருமான குட்டி ரேவதி ஒரு படத்தை இயக்கவிருக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தில் சமுத்திரகனி ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்க அவருக்கு சமமான ஒரு கேரக்டரில் நந்திதா தாஸ் நடிக்கிறாராம். ‘அழகி’, ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ ஆகிய படங்களில் நந்திதா தாஸ் ஏற்று நடித்த கேரக்டர்களை விட இப்படத்தில் அவருடைய கேரக்டர் மிக வலிமையானதாம்! இப்படத்தின் அதிகார்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேரன்பு ட்ரைலர்


;