சிம்புவுடன் இணையும் ஸ்ரேயா!

சிம்புவுடன் இணையும் ‘சிவாஜி’ ஹீரோயின்!

செய்திகள் 5-Jul-2016 10:24 AM IST VRC கருத்துக்கள்

‘த்ரிஷா இல்லானா நயன்தாரா’ பட புகழ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக ஸ்ரேயா சரண் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. சிம்புவும், ஸ்ரேயாவும் இணைந்து நடிக்கும் முதல் படம் இது. சமீபத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தோழா’ படத்தில் ஸ்ரேயா ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து ‘AAA’ படத்தில் சிம்புவுடன் இணைகிறார் ஸ்ரேயா. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் ஆர்மபமாகவுள்ளது. சென்னை, மைசூர் கேரளா ஆகிய இடங்களில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறதாம். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இப்படத்திற்கான இரண்டு பாடல்கள் ரெடியாகி விட்டதாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அச்சம் என்பது மடமையடா - தள்ளி போகாதே பாடல் வீடியோ


;