கார்த்தியின் ‘காஷ்மோரா’ - டப்பிங் துவங்கியது!

டப்பிங் பணிகளில் கார்த்தியின் காஷ்மோரா!

செய்திகள் 5-Jul-2016 10:10 AM IST VRC கருத்துக்கள்

கார்த்தி நடிப்பில் மிகப் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் படம் ‘காஷ்மோரா’. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ‘ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டப்பிங் வேலைகள் இன்று துவங்குகிறது. ‘காஷ்மோரா’வை தீபாவளி ரிலீசாக திரைக்கு கொண்டு வர இருப்பதை தயாரிப்பு தரப்பினர் சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர். கோகுல் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காஷ்மோரா’வில் கார்த்தியுடன் நயன்தாரா, ஸ்ரீதிவ்யா முதலானோர் நடித்துள்ளனர். ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருந்து வரும் கார்த்தியின் ‘காஷ்மோரா’ ரசிகர்களுக்கு தீபாவளி ட்ரீட்டாக அமையவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தர்பார் ட்ரைலர்


;