மணிரத்னம், கார்த்தி பட ஷூட்டிங் எப்போது?

பைலட்டாக நடிக்க கார்த்தி பிரத்தியேக பயிற்சி!

செய்திகள் 4-Jul-2016 4:11 PM IST VRC கருத்துக்கள்

‘காஷ்மோரா’ படத்தை முடித்த கையோடு மணிரத்னம் இயக்கும் படத்தில் நடிக்க ரெடியாகி விட்டார் கார்த்தி! மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் முதல் படமான இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அதிதி ராவ் நடிக்கிறார். இப்படத்தில் கார்த்தி பைலட் ஆக நடிக்கிறாராம்! இதற்காக கார்த்தி தற்போது பிரத்தியேக பயிற்சி எடுத்து வருகிறாராம். இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற 8-ஆம் தேதி சென்னையில் துவங்குகிறது. இதனை தொடர்ந்து ஊட்டி, ஜம்மு காஷ்மீர் ஆகிய இடங்களிலும் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெறவிருக்கிறது என்று கூறப்படுகிறது. இப்படத்தின் ஒளிப்பதிவு பொறுப்பை ரவிவர்மன் ஏற்றுள்ளார். மணிரத்னத்தின் ஆஸ்தான இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். ‘ஓகே கண்மணி’ வெற்றிப் படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கும் படம் இது என்பதால் இப்போதே இப்படம் மீது எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைக்கோ ட்ரைலர்


;