ராமகிருஷ்ணன் கதாநாயகனாக நடிக்கும் ‘ஒரு கனவு போல’

ராமகிருஷ்ணன், சௌந்தர் ராஜன்  இணைந்து நடிக்கும் படம்!

செய்திகள் 4-Jul-2016 11:15 AM IST VRC கருத்துக்கள்

‘குங்குமப்பூவும் கொஞ்சும் புறாவும்’ படத்தில் கதாநாயகனாக நடித்த ராமகிருஷ்ணன் மற்றும் சௌந்தர் ராஜன் கதாநாயகர்களாக நடிக்கும் படம் ‘ஒரு கனவு போல’. நாயகியாக புதுமுகம் அமலா நடிக்கிறார். இவர்களுடன் தேசிய விருது பெற்ற மலையாள நடிகர் மதுபால் மற்றும் அருள்தாஸ், சார்லி, மயில்சாமி, சுப்பிரமணி, கவி பெரியசாமி, வின்னர் ராமச்சந்திரன் ஆகியோரும் நடிக்கும் இப்படத்தை வி.சி.விஜயசங்கர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார். ‘ஒரு கனவு போல’ படம் குறித்து இயக்குனர் வி.சி.விஜயசங்கர் கூறும்போது,
‘‘லாரி டிரைவராக இருக்கும் ராமகிருஷ்ணனுக்கும், சினிமாவில் பாடகர் ஆக வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழும் சௌந்தர் ராஜனுக்கும் உள்ள நட்பின் வலிமையை சொல்லும் படம் இது. வாழ்கையே ஒரு கனவு போல, ஆனால் அதில் நாம் வாழ்ந்தே தீர வேண்டும், ஒரு கதை போல என்கிற உயரிய, யதார்த்த கருத்தை பதிவு செய்யும் படம் இது. இப்படதின் படப்பிடிப்பு நாகர்கோவில், கன்னியாகுமாரி, ஹைதராபாத், கொடைகானல், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இறுதிகட்ட பணிகளில் இருக்கும் இப்பட்த்தின் இசையை விரைவில் வெளியிடவிருக்கிறோம்’’ என்றார்.

‘இறைவன் சினி கிரியேஷன்ஸ்’ என்ற பட நிறுவனம் சார்பாக சி.செல்வகுமார் தயாரிக்கும் இப்படத்திற்கு மலையாளத்தில் பிரபல ஒளிப்பதிவாளரான அழகப்பன் ஒளிப்பதிவு செய்கிறார். ஈ.எஸ்.ராம் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இரவுக்கு ஆயிரம் கண்கள் - டிரைலர்


;