2 விருதுகளை வென்ற நயன்தாரா, அனிருத்!

சைமா (2016) விருதுகள்!

செய்திகள் 4-Jul-2016 10:52 AM IST Top 10 கருத்துக்கள்

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA) வழங்கும் விழா கடந்த மாதம் 30, இம்மாதம் 1-ஆம் தேதி என இரண்டு நாட்கள் சிங்கப்பூரில் நடந்தது. இவ்விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட பட உலகத்தை சேர்ந்த கலைஞர்கள் கலந்துகொண்டு விருதுகள் பெற்றனர். இவ்விழாவில் பஞ்சு அருணாச்சலம், எஸ்.ஜானகி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. நடிகை சமந்தாவுக்கு ‘யூத் ஐகான்’ விருது வழங்கப்பட்டது. தமிழில் சிறந்த கலைஞர்களாக தேர்வு செய்யப்பட்டு விருதுகள் பெற்றவர்களின் விவரம் வருமாறு:

சிறந்த படம் : தனி ஒருவன்
சிறந்த இயக்குனர் : விக்னேஷ் சிவன் (நானும் ரௌடி தான்)
சிறந்த நடிகர் : விக்ரம் (ஐ)
சிறந்த நடிகர் (விமர்சகர் விருது) : ‘ஜெயம்’ ரவி (தனி ஒருவன்)
சிறந்த நடிகை: நயன்தாரா (நானும் ரௌடிதான்). இந்த விருது தவிர ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்தில் நடித்தமைக்காக சிறந்த மலையாள நடிகைக்கான விருதும் பெற்றார் நயன்தாரா.
சிறாந்த நடிகை (விமர்சகர் விருது): நித்யா மேனன்( ஓகே கண்மணி)
சிறந்த காமெடி நடிகர்: ஆர்.ஜே.பாலாஜி (நானும் ரௌடிதான்)
சிறந்த வில்லன் : அருண் விஜய் (என்னை அறிந்தால்)
சிறந்த துணை நடிகை : ராதிகா சரத்குமார்
சிறந்த துணை நடிகர் : பிரகாஷ்ராஜ் ( ஓகே கண்மணி)
சிறந்த அறிமுக நடிகை : கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)
சிறந்த அறிமுக நடிகர் : ஜி.வி.பிரகாஷ் குமார் (டார்லிங்)
சிறந்த இசை அமைப்பாளர் : அனிருத் (நானும் ரௌடிதான்)
சிறந்த பாடகர் :அனிருத் (தங்கமே…)
சிறந்த பாடகி : ஸ்வேதா மோகன்
சிறந்த பாடலாசிரியர் : வைரமுத்து ( ஓகே கண்மணி)
சிறந்த ஒளிப்பதிவாளர் : செந்தில்குமார் (பாகுபலி)
சிறந்த சண்டை இயக்குனர் : பீட்டர் ஹெய்ன் (பாகுபலி)

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தாராள பிரபு டீஸர்


;